×

களியக்காவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை, மே 17: நாகர்கோவில்  உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர்கள்  சுரேஷ், ராஜேஷ், பெலிக்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று காலை  களியக்காவிளையை அடுத்த திருத்துவபுரம் பகுதியில், உணவு கடத்தலை தடுக்கும்  பொருட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு  காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் சென்று விட்டார். இதனால்  சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அதனை சோதனை செய்தபோது தலா 50 கிலோ எடை கொண்ட 16 மூட்டைகளில் 800 கிலோ  ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை கேரளாவிற்கு கடத்தி செல்ல  டிரைவர் முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அரிசியுடன் அந்த  காரை பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவர் கேரள மாநிலம் கொடப்பனமூடு  பகுதியை சேர்ந்த சுதீஷ்(21) என்பவரை கைது செய்தனர்.

Tags : Kaliyakavila ,Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...