பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டம் அறிவிப்பு

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட திங்கள்சந்தை, இரணியல், குளச்சல், மணவாளக்குறிச்சி உள்பட பல்வேறு  பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.  குறிப்பாக இரவு வேளைகளில் சமூகவிரோத கும்பல் மின்தடையை சாதகமாக  பயன்படுத்தி நகைபறிப்பு, வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட  நாளுக்குள் மின்கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பை துண்டிக்கும்  மின்வாரியம், அறிவிக்காமல் மின்தடை ஏற்படுத்துவது நியாயம் தானா?. எனவே  மின்வாரியம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டு சீரான மின்விநியோகம் வழங்க  வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் காங்கிரஸ்  சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பிரின்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

× RELATED போலீஸ் ஏட்டுவை தாக்கிய தமமுக பிரமுகர் கைது