×

களக்காடு கோயில் வைகாசி விழாவில் நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளினார்

களக்காடு, மே 17: களக்காட்டில் பிரசித்தி பெற்ற சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோயிலில் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினசரி ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி-அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் நடந்து வருகிறது.

8ம் திருநாளான நேற்று நாடார் சமுதாயத்தினர் மண்டகப்படி சார்பில் நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதையொட்டி பகலில் சபாபதி மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின் நடராஜர், சிவகாமி அம்பாள் வாகனத்தில் உலா வந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். இரவில் கங்காளநாதர், சந்திரசேகர் சுவாமிகள் தனித்தனி வாகனங்களிலும், சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் பூங்கோயில், கிளி வாகனங்களிலும் வீதிஉலா வந்தனர், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (17ம் தேதி) நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 10ம் நாளான நாளை (18ம் தேதி) தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் மற்றும் மண்டப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Nataraja Green Sathya ,temple festival ,Kalakkadu ,
× RELATED திருமயம் அருகே மேரிநகர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா