×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், மே 17: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 568 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 568 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கர்நாடகாவில் தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, விநாடிக்கு 408 கனஅடியாக வந்த தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்ட நிலையில்,

நேற்று அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 568 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து இரண்டு மற்றும் மூன்றாம் மதகுகளிலிருந்து 568 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், தொடர்ந்து 5வது நாளாக கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

Tags : dam ,Kelavarapalli ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்