×

பரமத்திவேலூர் பகுதியில் சீமைகருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

பரமத்திவேலூர், மே 17: பரமத்திவேலூர் பகுதியில், காவிரி கரையோரம் ஏரி மற்றும் குட்டை பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ரங்கம்பாளையம், கந்தம்பாளையம் மற்றும் காவிரியாறு செல்லும் பகுதிகள், குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது.

இம்மரங்களால் நீராதாரம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், கடந்த 6 மாதத்திற்கு முன், பரமத்திவேலூரில் பல்வேறு இடங்களில் வளர்ந்த மரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. தற்போது மீண்டும் காவிரி கரையோரங்களில் இம்மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. சாலையோரங்கள், குட்டை பகுதிகளில் தற்போது வளர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து வந்துள்ளது. ஆனால், வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால், நீராதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், விவசாய தேவைக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் பொருட்டு, பரமத்திவேலூர் பகுதியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றவும் மாவட்ட நிர்வாகம்  வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரத்தில் இருந்து அக்கரைபட்டி செல்லும் கிராம சாலை சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரங்களில், சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த மரங்களை வாகனங்கள் உரசிச் செல்வதால், பயணிகளுக்கு முட்களால் காயங்கள் ஏற்படுகின்றன. மேலும், இரவில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இப்பிரச்னைகளை அதிகம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, சீமை கருவேல முட்செடிகளை சாலையில் இருந்து வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags : removal ,area ,Paramathivelur ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ