×

ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: சோனியாகாந்தி தலைமையில் காணொலி கூட்டத்தில் முடிவு

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021(திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற – ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் இல்லங்கள் முன் கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை அனுப்பியுள்ளனர். …

The post ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: சோனியாகாந்தி தலைமையில் காணொலி கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Condemning Union Govt 20 ,Dhagagam Alliance Parties ,Sonyagandhi ,Chennai ,India ,Congress ,Soniyagandhi ,Condemning Union Govt ,20th Dizhagam ,Alliance ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சோனியாகாந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்திப்பு