×

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கமல் மீது பாஜக புகார்

கும்மிடிப்பூண்டி: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மீது பாஜவினர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அரவக்குறிச்சி பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்து மதத்திற்கு எதிராகவும், இந்து மதத்தினர் மனம் புண்படும்படியாகவும், தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி கும்மிடிப்பூண்டியில் பாஜவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கும்மிடிப்பூண்டி நகர பாஜ செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாஜ உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் வேந்தன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திருமலை, ஒன்றிய துணை தலைவர் வி.செல்வம்,

இளைஞரணி நிர்வாகி எஸ்.புருஷோத்தமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பி.எஸ்.சந்தோஷ்பாபு, ஜி.மதி உள்ளிட்ட பாஜவினர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் புகார் குறித்து மாவட்ட எஸ்.பிக்கு  தெரிவிப்பதாக கூறினார். எனவே  பாஜகவினர் கலைந்து சென்றனர்.

Tags : BJP ,police station ,Kamal ,Gummidipoondi ,
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்