×

பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை: கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 19ம் தேதி திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கன்னபாளையம் வாக்குச்சாவடி எண் 195க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை  முன்னிட்டு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003ன்படி மறுவாக்குப் பதிவு நடைபெறும் கன்னபாளையம் கிராமம் பூந்தமல்லி தொகுதியில் வருவதால் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19ம் தேதி மாலை 6 மணி வரை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : shops ,Taskmah ,area ,Poonamalle ,Collector ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி