செங்கல்பட்டில் பரபரப்பு கழிவுநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

செங்கல்பட்டு மே 17: செங்கல்பட்டில் கழிவுநீர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. யாராவது அடித்து கொலை செய்து வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு அண்ணாநகர் 4வது குறுக்கு தெரு அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில், நேற்று முன்தினம் மாலை, 45 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.  அவ்வழியாக சென்றவர்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து, கால்வாயில் வீசினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : canal ,police investigation ,canal recovery ,
× RELATED சேலத்தில் வாடகை தராமல் ஏமாற்றியதாக...