×

மதுராந்தகம் சுற்று வட்டார பள்ளி வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில்  இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு நேற்று மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இதில், சுமார் 33 பள்ளிகளை சேர்ந்த 115 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த வாகனங்களை செங்கல்பட்டு சாலை போக்குவரத்து அதிகாரி நடேசன், மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதி, மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், தீயணைப்பு துறை அலுவலர் குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாகனங்களில் அவசர வழிகள், முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் போன்றவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தினர். அப்போது, வாகனங்களில் ஆவணம், ஓட்டுனர்களின் உரிமங்கள் மற்றும் உதவியாளர்களின் தகுதிகள் குறித்து சரிபார்த்தனர். மேலும், வாகன பராமரிப்பு, அனைத்து பேருந்துகளும் மாணவர்கள் பயணிக்க கூடிய அளவிற்கு தகுதியானவையாக உள்ளதா என பார்க்கப்பட்டன. டிரைவர்கள், உதவியாளர்கள் ஆகியோர் சாலை போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர், மாணவர்களுக்கான முதலுதவி சிகிச்சை பற்றி எவ்வாறு அளிப்பர் என ஆய்வு செய்தனர். இதில், மொத்தத்தில் கலந்துகொண்ட 115 பேருந்துகளில், இரண்டு பேருந்துகள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் இல்லை எனக்கூறி போக்குவரத்து துறை அதிகாரிகள் நிராகரித்தனர். மற்ற வாகனங்கள் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்தனர்.

Tags : Traffic Inspector Inspectorate ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு