ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ1 கோடி பறித்த வழக்கில் கோவையில் 2 பேர் கைது

சென்னை: கொரட்டூரை சேர்ந்தவர் முகமது தாஹிர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், போரூர் அருகே 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா ஏற்பாடு செய்து தர, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் பட்டா வாங்கி தரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, நெல்லையை சேர்ந்த ஜான் இளங்கோவை சென்னைக்கு வரவழைத்து, துரைப்பாக்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ஜான் இளங்கோ கும்பல் முகமது தாஹிரை சரமாரி தாக்கி, ஒரு அறையில் அடைத்தது. பின்னர், அவரது மனைவியை மிரட்டி, ரூ1 கோடியை பறித்துக்கொண்டு தப்பியது.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் தாஹிர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் இளங்கோ கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில்,  கோவையில் பதுங்கியிருந்த ஜான் இளங்கோ உள்ளிட்ட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : persons ,Coimbatore ,
× RELATED ஆசிர்வதிப்பதாக கூறி நூதன வழிப்பறி...