×

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

விருதுநகர், மே 16: விருதுநகர் பாரதிநகரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். விருதுநகரில் உள்ள பாரதி நகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்கப்போவதாக தகவல் பரவியது. உடனே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், கடையை திறந்தால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கும், இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் என கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். இதனிடையே, டாஸ்மாக் கடையை திறந்து மதுபான பாட்டில்களை எடுத்துச் செல்ல வந்தபோது பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீசார் மதுபானங்களை ஏற்றிச் செல்லத்தான் வண்டி வந்துள்ளது என தெரிவித்ததும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : shop ,area ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...