×

வெம்பக்கோட்டை அருகே சாலை சந்திப்பில் டிவைடர் சேதம்

சிவகாசி, மே 16: வெம்பக்கோட்டை அருகே, சாலை சந்திப்பில் சேதமடைந்துள்ள டிவைடரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே சங்கரன்கோவில், சாத்தூருக்கு செல்லும் விலக்கு சாலை உள்ளது. இந்த விலக்கில் 3 சாலைகள் சந்திக்கின்றன. இந்த சந்திப்பில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த 10 ஆண்டுகளுக்கு முன், சாலை நடுவே சிமெண்ட் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் எதுவும் இல்லை. மேலும், இந்த டிவைடர் சேதமடைந்துள்ளது. இச்சாலை வழியாக தினசரி வாகனங்கள் சென்று வருகின்றன. வெம்பக்கோட்டையில் இருந்து சங்கரன்கோவில், சாத்தூர் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதியில் பட்டாசு ஆலைகள் அதிகமாக இருப்பதால், பட்டாசு தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன.

போக்குவரத்து மிகுந்த இச்சாலை சந்திப்பில், டிவைடர் சேதமடைந்திருப்பதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள், சாலை சந்திப்பில் திரும்பும்போது டிரைவடர் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன. இந்த டிவைடரில் எச்சரிக்கை ஸ்டிக்கர் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த பெயின்ட் குறியீடு எதுவும் இல்லாதால் வாகன ஓட்டிகள் கவனகுறைவாக வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது.  இந்த சந்திப்பில் ஏற்கனவே பல விபத்துக்களில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சிமெண்ட் டிவைடர் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, வெம்பக்கோட்டை, சாத்தூர், சங்கரன் கோவில் செல்லும் சாலை சந்திப்பில், சிமண்ட் டிவைடரை சீரமைத்து போக்குவரத்து எச்சரிக்கை ஸ்டிக்கர் மற்றும் பெயின்ட் அடிக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை வேண்டும் என  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Divorter ,Road Junction ,Velampokottai ,
× RELATED சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி...