×

ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான விளக்க கூட்டம்

ஆண்டிபட்டி, மே 16: நடைபெற்று முடிந்த ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடமுகவர்களுக்கான விளக்கக் கூட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு 313 வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. இதையயடுத்து வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக தேனியில் உள்ள கம்மவர் கல்லூரியில் வைத்துள்ளனர். வருகின்ற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதை முன்னிட்டு, ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடமுகவர்களுக்கான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர் கண்ணகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 313 விவிபேட் எந்திரங்களில் 5 விவிபேட் எந்திரங்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்து, 23 சுற்றுகள் முடிந்த பின்னர் வேட்பாளர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படுவதாக கூறினார். நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சி அலுவலர் பாலசண்முகம் உடனிருந்தனர். மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து திமுக வை சேர்ந்த சுகுமாரன் கூறுகையில், ‘வாக்கு எண்ணும் தினத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உள்ள 5 விவிபேட் மெஷின்களை முதலில் எண்ணி காண்பித்த பின்னரே முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையை துவக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக வெற்றிவேல் கூறுகையில், ‘முதலில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 விவிபேட் மெஷின்களை வேட்பாளர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் எண்ணிய பின்னரே முதல் சுற்றை துவக்க வேண்டும். அப்படியானால் ன் பிரச்சனை வராமல் இருக்கும்’ என்றார். இதுகுறித்து மக்கள் நீதி மையம் வேட்பாளர் அழகர்சாமி கூறுகையில், ‘23 சுற்றுக்கு பின்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட விபிபேட் மிஷின்களை எண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. அதனால் வேட்பாளர்கள் முன்னிலையில் முதலில் விவிபேட் மெஷினில் உள்ள சின்னங்களை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : meeting ,Voters ,Antipathy Assembly Elections ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...