×

அரசு, தனியார் ஐடிஐக்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, மே 16: சிவகங்கை, காரைக்குடி அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அரசு ஐடிஐ முதல்வர் சீராளன் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை முத்துப்பட்டி, கரைக்குடியில் உள்ள அரசு ஐடிஐ, அரசு உதவி பெறும் தனியார் ஐடிஐ மற்றும் சுயநிதி தனியார் ஐடிஐக்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புபவர்கள் தற்போது ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களில் தங்களது விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 2019, ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளன.



மாணவர் விரும்பினால் வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே.31ஆகும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் என்பதை தெரிவிக்க வேண்டும். பிற மாவட்டங்களில் உள்ள ஐடிஐக்களில் பயிற்சி பெறவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் அளிக்க வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும். கூடுதல் விபரம் அறிய 04575 220447 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,ITIs ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...