வாலிபருக்கு சரமாரி வெட்டு

காரைக்குடி, மே 16: காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக முகமூடி அணிந்த மர்மநபர்கள் வாலிபரை சரமாரியாக வெட்டி சாய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவகோட்டை கல்லுபட்டியார் வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் பிரேம்குமார் (27). இவர், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 6ம் வீதி தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் பழைய டூவீலர் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  நேற்று மாலை பிரேம்குமார் கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத அளவில் முகமூடி அணிந்து டூவீலரில் வந்த 3 பேர், அவரை வெளியே சாலையில் இழுத்து வந்து அரிவாளால் 7 இடங்களில் சரமாரி வெட்டி சாய்து தப்பியோடி உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் பிரேம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : young lady ,
× RELATED செங்குன்றம் அருகே பரபரப்பு பெண் உள்பட 3 பேருக்கு சரமாரி வெட்டு