குண்டாசில் வாலிபர் கைது

மதுரை, மே 16: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல்(30). இவர் பைபாஸ் ரோட்டில் மசாஜ் சென்டர் வைத்து, அதன் மூலம் பாலியல் தொழில் செய்து வருவதாக எஸ்எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, ஜெயவேல் மற்றும் அவரது மனைவி ஜீவபிரியதர்ஷினி ஆகியோர் வெப்சைட் மூலம், மசாஜ் சென்டரில் வேலைக்கு ஆட்கள் தேவை அதிக சம்பளம், தங்கும் வசதி இலவசம் என ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களை ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர். அப்படி வரும் பெண்களை பல இடங்களில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயவேல், புரோக்கர் அணீஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கு அடைத்து வைத்திருந்த 4 பெண்களையும் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஜெயவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நகர் போலீஸ் கமிஷனர் உத்தரவில் இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More
>