×

விமானப்படையை பலப்படுத்த மேலும் 350 போர் விமானங்கள்: 20 ஆண்டுகளில் வாங்க இலக்கு

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 350 போர் விமானங்கள் வாங்க இருப்பதாக விமானப் படை தளபதி பதவுரியா தெரிவித்தார். விமானப்படை தளபதி ஆர்கேஎஸ். பதவுரியா டெல்லியில் நேற்று நடந்த விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: வடக்கில் உள்ள நமது அண்டை நாட்டின் சவாலை எதிர்கொள்ள, விமானப்படையை பலப்படுத்த புதிய போர் விமானங்கள் தேவைப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக அதுவும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டதாக அவை இருக்க வேண்டும்.  எனவே, அடுத்த 20 ஆண்டுகளில் விமானப்படைக்கு 350 போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. பாதுகாப்பு துறையில் நாடு தற்சார்பு நிலையை எட்ட வேண்டியுள்ளது.  இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்தால், விமானத்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடையும் நம்பிக்கை கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.விமானப் படைக்கு புதிதாக 56 போக்குவரத்து விமானம்பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில்  நடைபெற்றது. இதில், விமானப்படையில்  தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய ‘ஏவிரோ’ ரக போக்குவரத்து விமானங்களுக்கு பதிலாக, புதிதாக 56 ‘சி-295’ ரக போக்குவரத்து விமானங்களை ஏர்பஸ்  நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 16 விமானங்கள் பறக்கும் நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும்.  மற்ற 40 விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது….

The post விமானப்படையை பலப்படுத்த மேலும் 350 போர் விமானங்கள்: 20 ஆண்டுகளில் வாங்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Air Force ,New Delhi ,Commander ,Bhadauria ,Indian Air Force ,
× RELATED அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை...