×

மயானத்தில் தண்ணீர் இல்லை

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாலைப்பட்டியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் உள்ளது. இங்கு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அடிகுழாய் செயல்பாடின்றி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்பவர்கள் தண்ணீர் குடத்தையும் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்து விட்டு கை, கால்களை சுத்தம் செய்ய முடியாமல் திரும்புகின்றனர். சீர்குலையும் சுகாதாரம் இதேபோல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி முழுவதும் பொது சுகாதாரம் சீர்குலைந்து வருகிறது. கிராமங்களில் முறையாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் குப்பைகள் சாலை முழுவதும் பரப்பி கிடக்கிறது. குறிப்பாக நாகல்வேனி நகரில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் முதல்நிலை அந்தஸ்து கொண்ட பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பில் மெத்தனம் காட்டி வருவது வேதனையாக உள்ளது. ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் குவிந்து கிடப்பதால் நிலத்தடி நீராதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாலைப்பட்டி மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்ளை அடக்கம் செய்ய செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊராட்சி முழுவதும் குப்பைகளை முறையாக அள்ளாததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பது, மாலைப்பட்டி மயானத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதுடன் குப்பைகளையும் முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்,

Tags : cemetery ,
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது