×

பாலகிருஷ்ணாபுரத்தில் சுகாதாரம் ‘சுமாரா’ கூட இல்லை

திண்டுக்கல், மே 16: பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளதுடன் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி. இங்கு பாலகிருஷ்ணாபுரம், மாலைப்பட்டி, அழகம்பட்டி, மாசிலாமணிபுரம், சவுந்தரராஜா ஏர்போர்ட் நகர், என்ஜிஓ காலனி, சிடிஓ காலனி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலே முதல்நிலை பேரூராட்சி அந்தஸ்திற்கு நிகரானது, அதிக வருவாயை ஈட்டக்கூடியது, அதிக ஜனத்தொகையை கொண்டது போன்றவைகளை உள்ளடக்கியது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி. இத்தகைய பெருமைகளை கொண்ட இவ்வூராட்சி பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை கட்டுப்படுத்துவதில் மட்டும் மெத்தனம் காட்டி வருகிறது. ஜன. 1 முதல் தமிழக அரசு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை செய்து, அதை கடைபிடித்து வருகிறது. ஆனால் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் மட்டும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை கட்டுப்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது. இதனால் ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகே யுள்ள கோயில் பின்புறம் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதே இதற்கு சாட்சி. இவற்றை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Balakrishnapuram ,
× RELATED வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது