×

மின்கட்டணம் செலுத்த முடியாமல் அலைக்கழிப்பு மாநகராட்சியும் வேலி அமைக்க முன்வருமா? கொடைரோடு அருகே 4 வழிச்சாலையில் பாமாயில் வேன் கவிழ்ந்து விபத்து

செம்பட்டி, மே 16:திண்டுக்கல்லில் இருந்து பாமாயில் ஏற்றிய சரக்கு வேன் மதுரை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. செம்பட்டி அருகே கும்மம்பட்டியை சேர்ந்த ரவி (36) என்பவர் வேனை ஓட்டி வந்தார். திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலை கொடைரோடு ஜெ.மெட்டூர் அருகே வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த டிரைவர் ரவி சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் வேனில் இருந்த பாமாயில் ரோட்டில் சிறிதளவு கொட்டியது. மேலும் நடுரோட்டில் வேன் கவிழ்ந்ததால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tribal Corporation ,paths ,Palai ,Kodaiyarai ,
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது