×

கணினியில் பதிவு செய்யாத முன்னாள் படைவீரர்களுக்கு நிதியுதவி கிடைக்காது ஜூன் 30க்குள் ஆவணங்களை பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

திருச்சி, மே 16:   திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவையர்களுக்கான அனைத்து சேவைகள் மற்றும் பயன்பாடுகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட உள்ளது. இதற்காக முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் விவரங்கள் (ஆன்லைன்) கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 50 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது.  இதுவரையிலும் கணினி மூலம் பதிவு செய்யாதவர்கள் இனி காலம் தாழ்த்தாமல் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களது விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு எந்த ஒரு நிதி உதவிகள், சான்றுகள் மற்றும் பயன்பாடுகள் பெறுவதில் இடையூறு ஏற்படும்.

 திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் தங்களது படைப்பணி விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி எண் இமெயில் ஐடி ஆகிய விவரங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதற்கான படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதனுடன் ஆவணங்களை ஒரே சிடியில் (குறுந்தகடு) தனித்தனியாக பதிவு செய்து உடனடியாக சமர்பிக்க வேண்டும்.  படைப்பணி புத்தகம் (டிஸ்சார்ஸ் புத்தகம்) பிடிஎப் வடிவில் 2 எம்பிக்குள் இருக்க வேண்டும், பிபிஓ பிடிஎப் வடிவில் 2 எம்பிக்குள் இருக்க வேண்டும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஜேபக் அல்லது பிஎன்ஜி அல்லது ஜேபிஜி வடிவில் 1 எம்பிக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அல்லது 0431-2410579 என்ற எண்ணில் தொடர்ந்து கொண்டு விவரம் அறியலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சிவராசு கூறியுள்ளார்.

Tags : Collector ,ex-servicemen ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...