×

கூத்தாநல்லூரில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

கூத்தாநல்லூர், மே 16: கூத்தாநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மின் தடைஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வந்த புகார்களை அடுத்துமின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது மன்னார்குடியில் இருந்து வரும் 110 கே.வி.மின்மாற்றியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தை குறைக்க வேறு வழிகள் இன்றி மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும், மின் அழுத்த வெப்பம் குறைந்தவுடன் மின்சார இணைப்பு தரப்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது. மேலும்  படிப்படியாக இந்த நிலைமாறும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்தமின்தடை தொடர்ந்ததோடு, நாள்ஒன்றுக்கு பலமுறை மின்சாரம் தடைபட்டது. இதனால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களும், குழந்தைகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் மின்சாரம் இருக்கும் நேரங்களிலும் குறைவழுத்த மின்சார விநியோகத்தால் பல இடங்களில் ஏசி, பிரிட்ஜ், இன்வெர்ட்டர் உள்ளிட்டவைகள் சரிவர இயங்கவில்லை. அதனால் வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும், மின்சாதனங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டதோடு, மின்சாரமும் தடைபட்டது வியாபாரிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு பள்ளிவிடுமுறையாதலால் வீடுகளில் மின்சாரம் இன்றி வெப்பத்தால் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...