×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருத்துனறப்பூண்டி, மே 16: திருத்துறைப்பூண்டி நகர பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட  நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தடை செய்யப்பட்ட பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி ஆணையர் பாஸ்கரன்  தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு தலா ரூ.1000 வீதமும், 5 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நகரில் தொடர்ந்து விற்பனை செய்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1,500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள்  விற்பனையில் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்