×

மன்னார்குடி, திருவாரூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டறியப்பட்ட 7 வாகனங்களுக்கு நோட்டீஸ்

மன்னார்குடி, மே 16: மன்னார்குடியில் 101 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரி கள் அதில் குறைபாடு கண்டறியப்பட்ட  7 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளி வேன், பஸ் உள்ளிட்ட 101 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், டிஎஸ்பி கார்த்திக், தீயணைப்பு நிலைய அதிகாரி மானெக்சா ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.


அப்போது தனியார் பள்ளி வாகனங்களில் அவசரகால கதவுகள் தடையின்றி எளிதில் திறக்கும்படி உள்ளதா, வாகன இருக்கைகள் எவ்வித சேதாரமின்றி உள்ளதா, மாணவர்கள் எளிதில் வாகனங்களில் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டுகள் பாதுகாப்பாக அமைக்கப் பட்டுள்ளனவா, முதலுதவி உபகரண பெட்டியில் மருந்துகள் உள்ளனவா, வாகனத்தின் முன்பின் ஒளிரும் விளக்கு களின் நிலை உள்ளிட்டவைகள் பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் ஆய்வு நடத்தப்பட்ட 101 வாகனங்களில் 7 வாகனங்களில் சிறு சிறு குறைகள் கண்டறியப்பட்டு அதனை 1 வார காலத்திற்குள் சரி செய்து  மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டுமென நோட்டீஸ் வழங்க ப்பட்டது. மேலும் ஆய்வில் பங்கேற்காத வாகனங்களும் 1 வாரத்திற்குள் ஆய்வுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கபட்டது.


இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி பேசுகையில், பள்ளி வாகன டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா என்பதை டிரைவர்களிடம் கேட்டறிந்து சாலை விதிகளை பின்பற்றி மிதமான வேகத்தில் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும், மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயற்சிக்க கூடாது என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில்  டிஎஸ்பி அசோகன் பேசுகையில், பள்ளி வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள் கவனத்துடன் இயக்க வேண்டும். செல் போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்க கூடாது. முக்கியமாக மதுப்பழக்கம் உள்ள ஒரு சில டிரைவர்கள் பணியின் போது எக்காரணத்தை கொண்டும் மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கக்கூடாது என கூறினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி மானெக்சா பேசுகையில், பள்ளி வாகனத்தில் திடிரென தீப்பிடித்தால் அதனை தீத்தடுப்பான் உபகரணத்தை கொண்டு தீயை எப்படி பாதுகாப்பாக அணைப்பது என்பது கூறித்து விளக்க மாக எடுத்துக் கூறி பேசினார். திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகிய தாலுகாவில் உள்ள 24 பள்ளிகளுக்கான வாகனங்களின் வருடாந்திர ஆய்வு பணி திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆர்டிஓ முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இதில் பிரேக்லைட், இண்டிகேட்டர் லைட், அவசரகால வழி மற்றும் முதலுதவி பெட்டி போன்றவை  சரிவர இல்லாத 4 வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு ஆர்டிஓ முருகதாஸ் தெரிவித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர்  கருப்பண்ணன், ஏடிஎஸ்பி ஜான்ஜோசப், டி.எஸ்.பி நடராஜன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Tiruvarur ,Mannargudi ,inspection ,
× RELATED மன்னார்குடியில் குழந்தைகள்...