×

இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்குதல் மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சை, மே 16: தஞ்சை மானம்புச்சாவடி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரபு (39). இந்து மக்கள் கட்சி நகர அமைப்பாளர். இவர் நேற்று முன்தினம் இரவு விளார் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் இவரை தாக்கியனர். இதில் காயமடைந்த பிரபு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் பிரபு புகார் செய்தார். அதில் மக்கள் நீதி மையம் கட்சியினர் தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Administrator ,People's Party ,Marathas ,Attacks ,
× RELATED வரலாற்றில் முதல் முறையாக ஹிந்து...