×

திருக்காட்டுப்பள்ளியில் சித்திரை திருவிழா

திருக்காட்டுப்பள்ளி, மே 16: திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரை திருவிழா நேற்று நடந்தது. திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோயிலில் டாக்சி, வேன் மற்றும் மினிவேன் தொழிலாளர்கள் சார்பில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனிதநீர், பால்காவடி, தீச்சட்டி, பறவை காவடிகளுடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
நேற்று முன்தினம் இ ரவு சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Tiruchirappalli Chaiti ,festival ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!