×

தற்கொலை இறப்புகளை தவிர்க்க எலி பேஸ்ட் விற்பனை வரைமுறைப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை, மே 16: புதுக்கோடடை  மாவட்டத்தில் பல தற்கொலை இறப்புகளை தவிர்க்க எலி பேஸ்ட் விற்பனையை  வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில்  எலி தொல்லையை போக்க பலர் எலி பேஸ்ட் மருத்தை வாங்கி  பயன்படுத்துகின்றனர். இதனால் பல இடங்களில் எலி பேஸ்ட் விற்பனை அமோகமாக உள்ளது. இந்நிலையில் மணரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவோர் தற்கொலையில் ஈடுபட எலி பேஸ்ட்டை வாங்கி சாப்பிடுகின்றனர். இதுபோன்ற  தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. எலி பேஸ்ட் சாப்பிட்ட உடனே அதன் வீரியத்தை காண்பிக்காது  மூன்று நாட்கள் கழித்து அதன் ஆட்கொல்லி வேலையை வேகமாக ஆரம்பித்து விடுகிறது. இதனை மருத்துவத்தால் தடுக்க முடிவது கடினமாக மாறிவிடுகிறது. ஏலி  பேஸ்ட்டில் பல மோசமான வேதிபொருட்கள் சேர்க்கப்படுகிறது. தற்கொலை  செய்துகொள்பவர்கள் எவ்வளவு சாப்பிட்டார். அதில் எவ்வளவு வேதி பொருட்கள்  இருந்தது என்று தெரிந்துகொள்வதற்குள் இறப்பு நேர்ந்து விடுகிறது. இந்த பேஸ்ட்டின்  இறப்பு  அதிகமாகி நடுத்தர  மக்கள் பல குடும்பங்கள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கு எலி பேஸ்ட் விற்பனையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை  வைத்துள்ளனர்.

இதுகுறித்து  புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம்  கூறியதாவது: எலி பேஸ்ட் சாப்பிடும் நபர்கள் முதல் 3 நாட்கள் நல்லா  இருப்பதுபோல் இருப்பார்கள். நான்காவது நாளில் இருந்து அதன் வேலையை  காண்பிக்க தொடங்கிவிடும். பூச்சி மருத்து சாப்பிட்டால் அவர்களுக்கு செயற்கை  சுவாசம் கொடுத்து அவர்களை காப்பற்ற முடியும். ஆனால் எலி பேஸ்ட்  சாப்பிட்டால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் ஈரலையும், சீறுநீரகத்தையும்  கடுமையாக தாக்கும். மேலும் மஞ்சல் காமாலை தாக்குதல் அதிகமாக இருக்கும்.  இதனால் எலி பேஸ்ட் சாப்பிடுபவர்களை பிழைக்க வைப்பது மிகவும் அரிது என்றார்.


Tags : Eli ,suicide deaths ,
× RELATED இறுகப்பற்று படத்தில் என்னை நீக்க முயற்சி: அபர்ணதி