×

கோடை உழவு செய்தால் தண்ணீரை சேமிக்கலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

விராலிமலை, மே 16: கோடை காலத்தில் பெய்யும் மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்தால் தண்ணீரை சேமிக்கலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. விராலிமலை வேளாண்மை உதவி இயக்ககுநர் பிரபாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விராலிமலை வட்டாரத்தில் கோடை மழை பெய்யும்போது நிலத்தை ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் மேல் மண் இறுக்கம் தளர்த்தப்பட்டு மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மழைநீர் உட்புகுத்திறன் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கும். மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. களைகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. உறக்க நிலையில் உள்ள புழுக்களின் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகிறது. மேலும் நன்மை தரும் உயிரினங்களின் பெருக்கத்துக்கு உதவுகிறது.
மழைநீரில் கரைந்துள்ள தழைச்சத்தை சேகரிப்பதால் மண்வளம் மேம்படுகிறது. வழிந்தோடும் மழைநீரின் வேகம் தடுக்கப்படுவதால் மழைநீர் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. எனவே விராலிமலை வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் மழை பெய்தவுடன் கோடை உழவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா