×

ஆலங்குடி பகுதி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை, மே 16: ஆலங்குடி பகுதி கடைகளில் ஆய்வு செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் பறிமுதல் செய்தார்.   ஆலங்குடி தாலுகா அலுவலக வீதி, கலைஞர் சாலை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பூக்கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல் கடைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் தட்டுகள், நெகிழி பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் என 100 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சுகாதார பணியாளர்கள், சுய உதவிக்குழு பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் மற்றும் விழி தொண்டு நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : area ,Alangudi ,
× RELATED சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கட்டிட பொருட்களால் போக்குவரத்து இடையூறு