முகநூலில் முதல்வர், துணைமுதல்வரை விமர்சித்தவர் கைது

அரியலூர், மே 16: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அரியலூரை சேர்ந்த வழக்கறிஞர் முரளி (45) என்பவர் படங்களுடன் முகநூலில் அவதூறாக விமர்சித்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மீது அதிமுக நிர்வாகி லோகராஜ் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் போலீசார் நேற்று முரளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...