×

செந்துறை அருகே குமிழியம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூர், மே 16: செந்துறை அருகே நேற்று நடைபெற்ற மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கடந்த 7ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் மற்றும் அம்மன் சுவாமிகளின் வீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதிகாலை 6.30க்கு தொடங்கிய தேரோட்டம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மாலை 3 மணிக்கு நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் குமிழியம் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Tags : Kumariyam Mariamman ,site ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...