அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேருவதற்கு நாளை கடைசி நாள்

பெரம்பலூர், மே.16: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்சேர மாணவர்கள் நாளைக் குள் (17ம்தேதி) விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-   2019- 2020ம் கல்வியாண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழுநேரம் தொழிற் பயிற்சியுடன்கூடிய பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். பட்டயப் படிப்பில்சேர 10ம்வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவியருக் கான முதலாமாண்டு பட்டயச்சேர்க்கை (2019 - 2020) அமை ப்பியல்துறை (சிவில்), இயந்திரவியல் துறை (மெக்கானிக்கல்),மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை (இசிஇ), மின்னியல்மற்றும் மின்னணுவியல்(இஇஇ), கணிப்பொறியியல் துறை(கம்ப்யூட்டர்) உள்ளிட்டப் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற உள்ளது.


இந்தக் கல்லூரியில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்விக்கட்டணம், மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் மாணவ, மாணவியருக்கு அரசால் வழங்கப்படும் இலவசப் பேருந்து பயணஅட்டையும், அரசு கல்வி உதவித்தொகை மற்றும் இலவச மடிக்கணினி பெற்று வழங்கப்படும். மேலும், மாணவ, மாணவியர் தங்கி பயில அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியில் இலவசமாக விடுதி வசதி உள்ளது. மாணவியருக்கு விரைவில் கல்லூரி வளாகத்தினுள் விடுதி துவங்கப்பட உள்ளது.
கடந்த 2018-2019ம் கல்வியாண்டில் கல்லூரி வளாகத்தேர்வு மூலமாக சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ150ம் செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் 17ம்தேதி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.45மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  முதலாமாண்டுக்கான கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்த மேலும்விவரங்களுக்கு 04328-243200என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

× RELATED பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்