×

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் திரண்டனர்

நாகை,மே 16:  நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சப்த விடங்களில் ஒன்றான நாகை காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து விநாயகர் திருவிழா, சுப்பிரமணியர் திருவிழா சந்திரசேகர் திருவிழா ஆகியவை நடந்தது. இவ்வாறு தொடர்ந்து 14 நாட்கள் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15ம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் தியாகேசர் உடனுறை நீலோத்தம்மாள் எழுத்தருளினர். இதை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது தியாகேசா, அரூரா என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் அமர்ந்திருந்த தியாகராஜ சுவாமிக்கு பூஜைகள் செய்தனர். தேரின் முன்பு சிவ வாத்தியம் முழங்க நாகையின் முக்கிய வீதிகள் வழியாக ஆடி அசைந்து சென்றது. விழாவிற்கு நாகை, காரைக்கால் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Tags : devotees ,temple ,Naga Neelayatchi Amman ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்