×

சுட்டெரிக்கும் வெயிலால் கருகும் வெற்றிலை பயிர்கள் விவசாயிகள் கவலை

கரூர், மே 16:  சுட்டெரிக்கும் வெயிலால் வெற்றிலை பயிர்கள் கருகிவருகின்றன. கரூர் மாவட்டத்தில் புகழூர், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நொய்யல், புங்கோடை, சேமங்கி, முத்தனு£ர்,கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், என்புகழூர். வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற ரக வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. சாகுபடி ஆனபின்னர் பறிக்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்படும் மண்டிகளுக்கும், விவசாயிகள் சங்க மண்டிக்கும்விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். தற்போது கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக தினமும் 104டிகிரி வெயில் கொளுத்துவதால் அனல்பறக்கிறது. கடும்வெயில் காரணமாக வெற்றிலை பயிர்களும் கருகி வருகின்றன. முகூர்த்தம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வெற்றிலை தேவை அதிகரித்துள்ள நிலையில் வெற்றிலை பயிர் கருகிவருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : bleeding bale ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு