×

மாரியம்மன் திருவிழா துவக்கம் அமராவதி ஆற்றில் இருந்து உடைந்த குழாய்கள் அப்புறப்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், மே 16:  திருவிழா வருவதால் உடைந்த குழாய்களை அமராவதி ஆற்றில் இருந்து அப்புறப்படுத்த பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர். கரூர் அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் பாலம்அருகே தரைப்பாலம் முன்பு இருந்தது. புதிய உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டுவிட்டதால் தரைப்பாலம் கைவிடப்பட்டது. இந்தஇடததில பாதாள சாக்கடையில் பதிப்பதற்கான குழாய்களையும், தரைப்பாலம் ஏற்படுத்த போடப்பட்டிருந்த குழாய்களும் சிதறிக்கிடக்கின்றன. அமராவதி ஆற்றில் தண்ணீர்வரத்தின்றி வறண்டுபோய் காணப்படுகிறது. பழுதான உடைந்த குழாய்களை ஆற்றின் மையப்பகுதியில் போட்டு வைத்துள்ளனர். கரூர் மாரியம்மன்கோயில் திருவிழா துவங்கிவிட்டது. ஆற்றில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.எனவே இடையூறாக இருக்கும் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : festivities ,Mariamman ,Amaravathi River ,
× RELATED மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா