×

ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர நடவடிக்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதி

க.பரமத்தி, மே16: ஏழை எளிய மக்களில் வீடு இல்லாதோருக்கு மூன்று சென்ட் நிலத்துடன் கான்கிரிட் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பேசினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று கரூர் ஒன்றியம் காகிதபுரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட இடங்கள் முழுவதும் சென்று  வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.220கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர 6மாதங்கள் முதல் ஓராண்டு காலம் ஆகலாம் .



ஏழை எளிய மக்களில் வீடு இல்லாதோருக்கு மூன்று சென்ட் நிலத்துடன் கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்படும். பள்ளபட்டி பகுதியில் அம்மா உணவகமும் தொகுதிக்குள் பல்வேறு இடங்களில் சமுதாய கூடமும், அரசு கலைஅறிவியல் கல்லூரியும், விவசாய விளை பொருள்களை பாதுகாக்கும் வகையில் குளிர் சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பொது மக்களுக்காக நல்ல பல அரிய திட்டங்கள் கொண்டு வருவார். அவற்றை பொதுமக்களாகிய உங்களின் வீடு தேடி கொண்டு வந்து சேர்ப்பேன். எனவே  இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார். பிரசாரத்தில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Tags : candidate ,concrete houses ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்