×

நங்கவரம் பகுதியில் வாழை, சவுக்கு, மூங்கில் திருட்டு விவசாய நலச்சங்கம் போலீசில் புகார்

குளித்தலை, மே16:  கரூர் மாவட்டம், நங்கம் தோகரை வாய்க்கால் விவசாய நலச்சங்க தலைவர் அணைஞ்சநூர்பாலகிருஷ்ணன் குளித்தலை காவல் நிலையத்தில் வாழை, சவுக்கு, மூங்கில் அடிக்கடி திருட்டு போவது குறித்து புகார் அளித்துள்ளார்.  அதில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலையை அடுத்த நங்கவரம், பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நங்கவரம் பகுதி (1), பகுதி (2), ஆகிய பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் சுமார் 500 ஏக்கரில் வாழை, கரும்பு, கோரை பயிர்கள் சாகுபடி செய்து வருகிறோம். இதில் பாசன வாய்க்காலில் 50 விழுக்காடும், நிலத்தடி நீர் மூலம் 50 விழுக்காடும், பாசனம் செய்து வருகிறோம்.  இந்த நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த சிலர் வாழைத்தார்களை வெட்டுவதும் மூங்கில் சவுக்குகளை திருடிச் செல்வதும் வழக்கமாக உள்ளது. இது நாள் வரையில் மொத்த விவசாய நிலங்களில் சுமார்  ஆயிரம் வாழைத்தார்களும், 5 ஆயிரம் சவுக்கு மூங்கில்களும் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது.  

ஆகவே நங்கவரம் பகுதியில் அடிக்கடி விவசாய நிலங்களில் வாழை, மூங்கில், சவுக்கு திருடு போவதை தடுத்து நிறுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Banana ,Chavu ,area ,Nangavaram ,
× RELATED வாழை கன்று நேர்த்தி குறித்து செயல்...