×

பாஸ்போர்ட் தொடர்பாக சந்தேகமா? அதிகாரிகளுடன் ‘வாட்ஸ்அப்’ல் பேசலாம்

சென்னை: பாஸ்போர்ட் அலுவலக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் வாராந்திர தொடர்பு திட்டத்தில் ‘சாட் வித் யுவர் பிஆர்ஓ’ என்ற நிகழ்ச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில், நேற்று நடந்தது. அப்போது சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பான அவர்களின் குறைகள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தனர். வாட்ஸ்அப்பில் தொடர்சியான அழைப்புகள் இருந்தது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகமாக இருந்தது. மேலும் பொதுமக்கள் பலர் வாட்ஸ்அப் மூலம் இணைக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை பொறுத்து, வாரத்திற்கு இருமுறை தொடர்பு கொள்ளும் வகையில் இச்சேவை அதிகரிக்கப்படும். இந்த தொடர்பு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 12 மணி முதல் 1 மணி வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் நடைபெறும். அதிகாரிகளை 73053 30666 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பாஸ்போர்ட் தொடர்பாக சந்தேகமா? அதிகாரிகளுடன் ‘வாட்ஸ்அப்’ல் பேசலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Passport Office ,
× RELATED கிரிமினல் வழக்கு நிலுவையில்...