×

ஆழியார்- வால்பாறை மலைப்பாதையில் இரைதேடி கூட்டமாக வரும் விலங்குகள்

பொள்ளாச்சி, மே 15:    பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் போதியளவு தண்ணீர் இல்லாததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர், இரை தேடி இடம்பெயர்வது தொடர்கிறது.  கடந்த சில வாரமாக நவமலை, சர்க்கார்பதி, ஆழியார் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியிலிருந்து, யானை, கடமான், வரையாடு உள்ளிட்ட விலங்குகள், ஆழியார் வால்பாறை ரோட்டோரம் உலா வந்துள்ளது.
அதிலும் தற்போது, ஆழியார் அணையை நோக்கி  தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில்,  யானைகள் வரிசையாக அணிவகுத்து பாதையை  கடந்து செல்கிறது.   சிலநேரங்களில், யானைகள் ரோட்டோரம் உள்ள மரக்கிளைகளை உடைத்து, சிலமணிநேரம் அங்கேயே உலாவந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், கோடை விடுமுறையையொட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி யானையை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக, கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : foothills ,mountain range ,Aliyar-Valparai ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...