×

தாய்,அக்காவை கொன்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா?

கோவை, மே 15:   கோவை ரேஸ்ேகார்ஸ் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (65). இவர் மகள் கீதா (40), மகன் சரவணக்குமார் (38). பாப்பாத்தியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு அவினாசி ரோட்டில் 10 சென்ட் பரப்பில் இருமாடி வீடு உள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வீட்டை விற்கும் விவகாரம் தொடர்பாக பாப்பாத்திக்கும், அவர் மகனுக்கும் மோதல் நிலவியது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தாய் மற்றும் சகோதரியை வீட்டில் வைத்து சரவணக்குமார் தாக்கி, கெரசின் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இரண்டு கொலைகள் நடந்து 3 மாதம் கடந்த பின்னரே போலீசார் சடலத்தை மீட்டனர். இந்த கொலையில், சரவணக்குமார் தலைமறைவாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவரை ரேஸ்ேகார்ஸ் போலீசார் கைது செய்தனர்.

சரவணக்குமார் மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையின் மனநல பிரிவில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். டாக்டர் சிகிச்சையின் போது சரவணக்குமார் தெளிவான வகையில் பதில் கூறவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு கொலை சம்பவம் நடந்த தேதி, எப்படி கொலை செய்தார், எப்படி தப்பி சென்றார், எங்கே இருந்தார் என்ற விவரங்களை சொல்ல தெரியவில்லை. சரவணக்குமார் கொலை செய்த பின்னர், சடலத்துடன் அங்கேயே சில நாட்கள் இருந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சரவணக்குமார் 2 பேரையும் திட்டமிட்டு கொலை செய்து கெரசின் ஊற்றி எரிப்பது சாத்தியமானது தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சரவணக்குமாரிடம் மன நிலை பாதிப்பு தொடர்பான சோதனை நடத்தப்படும். இதில் எவ்வளவு சதவீதம் மன நிலை பாதிப்பு, சம்பவம் நடந்த போது அவர் மன நிலை பாதிப்பில் இருந்தாரா, வேறு எதாவது உளவியல் ரீதியான பாதிப்பு இருக்கிறதா என டாக்டர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், சரவணக்குமாரை கோவை மத்திய சிறையில் அடைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : sister ,
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’