×

கோவை மாவட்ட அளவிலான கால்பந்து லீக் எம்.ஆர்.எப்.சி,வாகா எப்.சி அணிகள் கோல் மழை

கோவை, மே 15 : மாவட்ட அளவிலான  ‘சி’ டிவிஷன் கால்பந்து  லீக் போட்டியில் எம்.ஆர்.எப்.சி,வாகா எப்.சி அணிகள் கோல்மழை பொழிந்து வெற்றி பெற்றன. கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ‘சி’ டிவிஷன் கால்பந்து போட்டிகள் ஏப்ரல் 28ம் தேதி துவங்கி மே 15ம் தேதி வரை நடக்கிறது. ‘சி’ டிவிஷனில், 9 அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘சி’ டிவிஷனுக்கான போட்டிகள் கார்மல் கார்டன் பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. தினசரி இரண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில், ஒரு போட்டியில்  எம்.ஆர்.எப்.சி அணியும் ராயல் எஸ்.சி அணியும் மோதின. இதில் எம்.ஆர்.எப்.சி அணி 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. எம்.ஆர்.எப்.சி அணி வீரர்கள் கோகுல் 4 கோல்களும், சுரேஷ் 2 கோல்களும், அடித்து அசத்தினர். ராயல் எஸ்.சி அணி தரப்பில் கோகுல் ஒரு கோல் அடித்தார். மற்றொரு போட்டியில் வாகா எப்.சி அணியும் டி.எம்.எப்.சி அணியும் மோதின. இதில் வாகா எப்.சி அணி 6-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. வாகா எப்.சி வீரர் அலிஸ்டர் 5 கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அந்த அணி வீரர் நவீன் ஒரு கோல் அடித்தார். டி.எம்.எப்.சி தரப்பில் ரேவந்த் ஒரு கோல் அடித்தார்.

Tags : MRFC ,Coimbatore district ,Waka FC ,
× RELATED கோவை மாவட்டம் சிங்காநல்லூா் பேருந்து...