×

கொங்குநாடு செவிலியர் கல்லூரியில் மரம் நடும் விழா

கோவை, மே 15: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை கொங்குநாடு செவிலியர் கல்லூரியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
கொங்குநாடு மருத்துவமனை சார்பாக கொங்குநாடு செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற மரம்நடும் விழாவிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜூ, செவிலியர் கண்காணிப்பாளர் தங்கமணி ஆகியோர் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டனர். இதில் நிழல் மையம் அமைப்பின் நிறுவனர் முருகன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வினோத்குமார், மருத்துவமனை பி.ஆர்.ஓ செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
200 பவுன் நகை மீட்க தீவிரம்

கோவை, மே 15: கோவை ராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் 803 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராமநாதபுரம் போலீசார் நகை திருடிய சுரேஷ் (30), நிதி நிறுவன ஊழியர் ரேணுகாதேவி (26) ஆகியோரை கைது செய்தனர். நகைகள் சுரேஷ் வசம் இருப்பது தெரியவந்தது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேசை 3 நாள் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 சுரேசிடம் நேற்று 2 நாளாக விசாரணை நடந்தது. இவரிடம் ஏற்கனவே 603 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. மீதமுள்ள 200 பவுன் நகைகள் தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அப்போது சுரேஷ் நகை உருக்கும் போது செம்பு உருகி போய் விட்டது.

சில நகைகள் 916 ஹால் மார்க் முத்திரை இல்லாமல் இருந்தது எனக்கூறினார். போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் போலீசில் கூறினார். போலீசார் சுரேசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 200 பவுன் தங்க நகைகள் வேறு பகுதியில் பதுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். நகைகள் மீட்கப்படும், நகையில் செம்பு இருந்ததா என உறுதி செய்ய முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags : tree planting ceremony ,Kongu Nurse College ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...