×

ஊட்டி காளான் விலை உயர்வு வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி, மே 15: முகூர்த்தம் நாட்கள் அடுத்தடுத்து வந்த நிலையில், ஊட்டி மொட்டு காளான் கிலோ ஒன்று ரூ.250 வரை விற்கப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் மொட்டு காளான்களுக்கு சாதாரணமாக மார்க்கெட்டில் அதிக கிராக்கி உள்ளது. எனினும், தற்போது சமவெளிப் பகுதிகளில் சிலர் இந்த காளான்களை குடில்களில் வளர்க்கின்றனர். அவர்கள், சமவெளிப் பகுதிளில் உற்பத்தி செய்யப்படும் காளான்களை ஊட்டி காளான் என்ற பெயரில் விற்பனை செய்வதால், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொட்டு காளான்களுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊட்டியில் இருந்து விற்பனைக்கு செல்லும் காளான்களை மட்டுமே சிலர் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சாதாரண நாட்களில் ஊட்டி காளான் கிலோ ஒன்று 100 முதல் 150 வரை விற்னை செய்யப்படுவது வழக்கம். மொத்தமாக வாங்கினால், இன்னும் விலை சற்று குறைந்து காணப்படும். ஆனால், முகூர்த்த நாட்களில் பலரும் இதனை வாங்குவதால், விலை அதிகரிக்கும். இம்முறை வரும் 16, 17 ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்த நிலையில், ஊட்டி காளான் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ஒன்று ரூ.200 முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், காளான் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Oyster mushroom cheerleaders ,traders ,
× RELATED வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம்...