×

பெருமாநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, மே 15:  பெருமாநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவிநாசி அருகே பெருமாநல்லூர் பகுதியில் உள்ள கடைகள், வணிக, வர்த்தக நிறுவனங்கள், தேநீர் விடுதிகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில் பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வணிக கடைகளிலும், நான்கு அரசு டாஸ்மாக் பார்களிலும் அதிரடி சோதனையை அதிகாரிகள் நடத்தினர். இதில் 180 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு வணிக நிறுவனத்துக்கு ரூ.500 வீதம், 40 வணிக  நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த அதிரடி சோதனை  தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த சோதனையில் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perumannallur ,
× RELATED பெருமாநல்லூர் அருகே சீரான குடிநீர்...