×

சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசும்

ஊட்டி, மே 15: போக்குவரத்து காவல்துறை சார்பில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. நீலகிரியில் கோைட சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் நகரில் ஏற்பட கூடிய ேபாக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை நீலகிரி மாவட்ட காவல்துறை எடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஊட்டி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்ட வேண்டாம். வேகத்தை விட பாதுகாப்பு மிக முக்கியம். இரவில் எதிரில் வாகனம் வரும் போது ஒளியை குறைக்க வேண்டும். சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். வளைவுகளில் முந்த கூடாது.


மருத்துவமனை, பள்ளி ஆகிய இடங்களில் கவனமாக செல்வதுடன் ஒலி எழுப்புவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும். நகர்புறங்களில் முகப்பு விளக்கின் ஒளியை குறைக்க வேண்டும். நிற்கும் முன் சிக்னல் செய்ய வேண்டும். மழை நேரங்களில் வேகத்தை குறைக்க வேண்டும். ஆம்புலென்ஸ், தீயணைப்பு வண்டிகளுக்கு வழி விட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் பாரம் ஏற்ற கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவி ஜெரோனி, சேரிங்கிராஸ் காவல்துறை கட்டுபாட்டு மையத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை மைக் மூலம் பேசினார். இந்நிகழ்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி