×

மேட்டுப்பாளையம்-ஊட்டி ஒரு வழிப்பாதையால் கோத்தகிரியில் தொடர் விபத்து

கோத்தகிரி, மே 15:  மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை தற்காலிக ஒரு வழிப்பாதையாக மாற்றியதால் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக அதிக வாகனங்கள் செல்வதால் தொடர் விபத்து ஏற்படுகிறது. நீலகிரி மாவடத்தில் கோடை சீசன் தற்போது துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டு மாவட்டத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் மேட்டுப்பாளையம், குன்னூர் மலைப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கடந்த கோடை சீசனின் போது வாரம் 2 நாட்கள் மட்டும் ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டது.  தற்போது தினந்தோறும் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோத்தகிரி பகுதியில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கைத்தலா, தவிட்டுமேடு, அரவேனு உள்ளிட்ட பகுதியில் சாலையின் அருகே குடியிருப்பு பகுதிகள், பொது கழிப்பிடம் உள்ளதால் அப்பகுதி மக்கள் சாலையினை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே, காவல்துறையினர் சுற்றுலா பயணிகளிடையே மலைப்பாதையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே ஒருவழிப்பாதையாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mettupalayam-Ooty ,lane accident ,Kotagiri ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்