×

குண்டும், குழியுமான பாவாலி ரோடு

விருதுநகர், மே 15: விருதுநகரில் குண்டும், குழியுமாக இருக்கும் பாவாலி ரோட்டை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரில் உட்பகுதி சாலைகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழா நிதி ரூ.14.20 கோடியில் புனரமைக்கப்பட்டன. அப்போது பாவாலி ரோடும் புதிதாக போடப்பட்டது. 100 மீ தூரமுள்ள இந்த சாலையில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன. நகருக்குள் வரும் அனைத்து பஸ்களும், இந்த சாலை வழியாக மீனாம்பிகை பங்களா நிறுத்தம், பழைய பஸ்நிலையம் செல்கின்றன. மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள், நகருக்குள் வந்து செல்லும் லாரிகள், வேன்கள், கார்கள் அனைத்தும் இந்த சாலை வழியாக சிவகாசி சாலைக்கு சென்று வருகின்றன.

பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், மின்வாரியத்தில் மின்கட்டணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாவாலி ரோடு பாவமான முறையில் காணப்படுகிறது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையின் பக்கவாட்டில் வாறுகால் குட்டையாக இருப்பதால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் குழிகளில் சறுக்கி வாறுகால் சேற்றில் விழுந்து செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பாவாலி ரோட்டில் குழியாக இருக்கும் பகுதியில் விரைவாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...