பிஎட் கல்லூரி ஆண்டு விழா

திருவில்லிபுத்தூர், மே 15: திருவில்லிபுத்தூர் அருகே, சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரியின் 13வது ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் திலீபன் ராஜா தலைமை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் முருகேசன் கலந்து கொண்டார். விழாவையொட்டி நடந்த கலை, இலக்கிய, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சுரேஷ்குமார் முருகேசன் பரிசு வழங்கினார்.

விழாவில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன், இளங்கலை தேர்வில் கல்லூரியில் முதலிடம் பெற்ற மாணவர் சைமனுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி முத்துலட்சுமிக்கும் ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும், கல்வியாண்டில் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட அருணாவிற்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரியில் பணியாற்றும் அனைவருக்கும், கல்லூரிச் செயலாளர் திலீபன்ராஜா பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு, முதலாமாண்டு மாணவ மாணவியர் சார்பில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. பேராசிரியர் மாரியப்பன் நன்றி தெரிவித்து பேசினார்.

Tags : BET College Annual Festival ,
× RELATED அருப்புக்கோட்டை நகராட்சி புதிய...