×

அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை

சின்னமனூர், மே 15: அரசு மருத்துவமனையில் அதிகரித்து வருகின்ற நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத் திரைகள் இருப்பு இல்லாததால் பிரஸர், சர்க்கரை நோய்களு–்கு மாத்திரைகளும் சரி வர கிடைக்காததால் பொதுமக்கள் எல்லாம் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட 8 அரசு பொது மருத்துவமனைகளும் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் அனைத்து ஒன்றிய அளவில் 30 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 800 முதல் ஆயிரம் 20 ஆயிரம் நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களது நோய்களுக்கு தகுந்தார் போல் சிசிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி ஊசி போடப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேனி மாவட்ட அரசு மருத்துவ நிர்வாகத்திலிருந்து மருந்து, மாத்திரைகள் அனுப்பப்படுகிறது. அதன்படி 3 மாதம் வரையில் இருப்பு வைத்து ஒவ்வொரு சிகிச்சைக்கும் பத்து நாள் வீதம் ஒரு மாதம் என மருந்து மாத்திரை மொத்தமாக வழங்கப்படுகிறது.

குறிப்பாகச் சொல்லப்போனால் சர்க்கரைநோய், பிரஸர் போன்ற நோய்கள் அவசர காலத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுவதால் மருத்துவமனைகளில் நிரம்பி வழிகிறது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் ஓ.பி. சீட்டு பெற்று பதிவு செய்து நோட்டுகள் மூலமாக மாதம் ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நோயாளிகள் மாத்திரைகளை சாப்பிட்டு ஒரு அளவிற்கு நோய்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தற்போது கடந்த சில மாதங்களாகவே உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் மிகுந்த பற்றாக்குறையாகவே உள்ளது. குறிப்பாக சர்க்கரை, பிரஸர் போன்ற நோய்களுக்கு மருத்துவமனைகளில் இருப்பு இல்லாததால் நோயாளிகளுக்கு சரிவர கிடைக்காமல் மேற்படி நோய்கள் கட்டுபடுத்த முடியாமல் அவதியடைகின்றனர். குறிப்பாக ஏழை, எளியோர் கடும் அவதியடைந்து வெளியில் அதிக விலை கொடுத்து வாங்கிட முடியாமல் சிரமத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து ஒரு மருத்துவ அதிகாரியிடம் கேட்டபோது, ‘சர்க்கரை, பிரஸர் மாத்திரைகள் ஸ்டாக் இல்லாமல் மிகுந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் அதற்காக மருத்துவ குழுவினர் தற்காலிகமாக கைப் பொறுப்பில் வாங்கி சமாளித்து வருகிறோம். இருந்தாலும் மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறோம்’ என்றார்.

Tags : government hospital ,
× RELATED முற்றுகை போராட்டம்